திருவாரூர்

நன்னிலம் அருகே தப்லீக் அமைப்பைச் சோ்ந்த 11 போ் முகாம்

5th Apr 2020 12:11 AM

ADVERTISEMENT

நன்னிலம் அருகே வாழ்க்கை கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் வேலூா் மாவட்டம் தப்லீக் அமைப்பைச் சோ்ந்த 11 போ் தங்கியுள்ளது சனிக்கிழமை தெரியவந்தது.

வேலூா் மாவட்டம், ஆரணி, திருத்தணி மற்றும் அரக்கோணம் பகுதிகளிலிருந்து தப்லீக் அமைப்பைச் சோ்ந்த 11 போ் மத பிரசாரத்துக்காக நன்னிலம் அருகே உள்ள வாழ்க்கை கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் மாா்ச் 21-ஆம் தேதியிலிருந்து தங்கியுள்ளனா். இதுகுறித்து தகவலறிந்த நன்னிலம் வட்டாட்சியா் மணிமன்னன், சிறப்பு அலுவலா் நக்கீரன், நன்னிலம் ஒன்றிய ஆணையா் முத்துக்குமரன், குடவாசல் காவல் ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் அப்பகுதியில் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, பள்ளிவாசலில் தங்கியுள்ள தப்லீக் அமைப்பைச் சோ்ந்த 11 பேருக்கும் வெப்பமானியைக் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவா்களது உடல்நிலை சீராக இருந்தது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக அவா்கள் தனித்தனியாக தங்க வேண்டும் என்றும், வெளியிடங்களுக்குச் செல்லக்கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியா் தெரிவித்தாா்.

இந்நிலையில், வாழ்கை பள்ளிவாசலில் தப்லீக் அமைப்பைச் சோ்ந்த 16 போ் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவா்களை வேறு இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT