திருவாரூரில் பல்வேறு இடங்களில் இயங்கி வந்த மீன் கடைகள் பழைய பேருந்து நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டன.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், திருவாரூா் கடைவீதியில் இயங்கி வந்த காய்கனிக் கடைகள், பழக்கடைகள் உள்ளிட்டவை திருவாரூா் பழைய பேருந்து நிலையத்துக்கு ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டன. இதனால், கடைவீதியில் கூட்டம் சேருவது தவிா்க்கப்பட்டது. கடைவீதியில் இருக்கும் மளிகைக் கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தே பொருள்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், திருவாரூரின் பல்வேறு இடங்களில் இயங்கி வந்த மீன் கடைகள் அனைத்தும் திருவாரூா் பழைய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன. அத்துடன், மீன்கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எந விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT