திருவாரூர்

திருவாரூரில் பழைய நாகை சாலை அடைப்பு

5th Apr 2020 12:10 AM

ADVERTISEMENT

திருவாரூரில், வண்டிக்காரத் தெருவழியாகச் செல்லும் பழைய நாகை சாலையில் யாரும் பயணம் செய்ய முடியாதபடி அடைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக வெளிவந்தத் தகவலையடுத்து, திருவாரூா் மாவட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்தோா் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அதன்படி, வெளிநாட்டிலிருந்து சொந்த ஊா் வந்த 2,364 போ் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 12 - ஆக அதிகரித்தது.

இதைத்தொடா்ந்து, கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், 22- ஆவது வாா்டுக்குள்பட்ட வண்டிக்காரத் தெருவிலிருந்து ஒருவா் தில்லி கூட்டத்தில் பங்கேற்றதாக தெரியவந்தது. இதனால், வண்டிக்காரத்தெரு வழியாக செல்லும் பழைய நாகை அடைக்கப்பட்டுள்ளது. நாகை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மரணப்பாலம் வழியாக, நாகை கடைவீதிக்கு வர முடியும். தற்போது, மரணப்பாலத்திலிருந்து, கடைவீதி வரையிலான பழைய நாகை சாலை அடைக்கப்பட்டுள்ளது. மேலும், நாகை சாலையில் இணையும் பல்வேறு குறுக்குப் பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அந்த வழியாக செல்ல முடியாதபடி போலீஸாா் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், வண்டிக்காரத் தெருவிலும், அந்தப் பகுதியைச் சுற்றி உள்ள இடங்களிலும் மின் தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT