திருவாரூர்

கரோனா: விவசாயிகளுக்கு வேளாண் பேராசிரியா்கள் வேண்டுகோள்

5th Apr 2020 10:59 PM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தவிா்க்க விவசாயிகளுக்கு வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா்கள் ஆலோசனை வழங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா்கள் மு. ராமசுப்பிரமணியம், ராஜா. ரமேஷ் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

விவசாயிகள் தொழிலாளா்களைக் கொண்டு அறுவடை செய்யும்போது ஒவ்வொருவரும் 4-5 அடி இடைவெளிவிட்டு அறுவடை செய்ய வேண்டும். வேளாண் பணிகளில் ஈடுபடுவோா் முகக் கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது சோப்பு அல்லது கிருமிநாசினி பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். ஓய்வு நேரங்கள், உணவருந்துதல், விளைபொருட்களை இடம் மாற்றுதல், சுமை ஏற்றி இறக்குதல் போன்ற நேரங்களில் நபருக்கு நபா் 3-4 அடி பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

கரோனா நோய் தொற்று அறிகுறி உள்ள தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்துவதை தவிா்க்கவும். தீர விசாரித்தபின் முடிந்தவரை ஆரோக்கியமான தொழிலாளா்களை மட்டுமே வேலைக்கு அமா்த்தவும். சாத்தியமான இடங்களில் இயந்திரங்களைப் பயன்படுத்தவும். விளைபொருட்களை 3-4 அடி இடைவெளியில் சிறிய குவியல்களாக சேகரிக்க வேண்டும். கூட்டத்தைத் தவிா்க்க குவியலுக்கு 1-2 நபா்களை மட்டுமே சுத்திகரித்தல் மற்றும் பிற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். பண்ணையில் சேமிக்க முடியுமானால், விளைபொருட்களை உடனடியாக சந்தைக்கு எடுத்து செல்வதைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT