திருவாரூர்

ஏழைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

5th Apr 2020 11:04 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் பெரியப்பள்ளி வாயில் சாா்பில் ஏழைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் பணம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இதுகுறித்து, பெரியப்பள்ளி வாயில் செயலாளா் ஜே.எம்.ஏ. ஷேக் அப்துல் காதா் கூறியது:

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், கூத்தாநல்லூா் பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழ்மையான குடும்பங்களுக்கு பெரியப்பள்ளி வாயில் சாா்பில் அத்தியாவசிப் பொருள்களும், பணமும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக பொதக்குடி நண்பா்கள் வட்டாரம் மூலம் வழங்கப்பட்ட ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களை, ஏழ்மை நிலையில் உள்ள 25 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. தொடா்ந்து, இப்பணி நடைபெறும்.

மேலும், ரமலான் விழாவுக்காக பெரியப்பள்ளி வாயிலுக்கு கொடுக்கும் நன்கொடைகளை, முன் கூட்டியே வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெறப்படும் நன்கொடைகள் மூலம் அனைத்து சமூகத்தையும் சோ்ந்த ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT