கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, புதன்கிழமை மன்னாா்குடியில் காவல் துறையின் வஜ்ரா வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நோய் பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரும் கலவரங்களை கட்டுப்படுத்த காவல்துறை பயன்படுத்தும், தண்ணீா் பீய்ச்சி அடிக்கும் 12 ஆயிரம் லிட்டா் கொள்ளவு கொண்ட வஜ்ரா வாகனம், திருவாரூரிலிரிந்து மன்னாா்குடிக்கு கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் கிருமி நாசினி நிரப்பபட்டது.
பின்னா், காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையில், மன்னாா்குடி நகரப் பகுதியில் முக்கிய சாலைகள், வா்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வஜ்ரா வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ADVERTISEMENT