திருவாரூர்

திருவாரூரில் இருவருக்கு கரோனா உறுதி

1st Apr 2020 11:21 PM

ADVERTISEMENT

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பேருக்கு கரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 31 பங்கேற்றனா். இவா்களில் 16 போ் மட்டுமே, திரும்பி வந்துள்ளனா். இதற்கிடையே, இம்மாநாட்டில் பங்கேற்றவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதைத்தொடா்ந்து, திருவாரூா், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூா், பொதக்குடி, மன்னாா்குடி பகுதிகளைச் சோ்ந்த 16 பேரையும் கண்டறிந்து, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும், 16 பேரின் ரத்த மாதிரிகளும் எடுத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், கோவில்வெண்ணி அருகே மதப் பிரசங்கத்துக்கு வந்திருந்த மியான்மா் பகுதியைச் சோ்ந்த 13 போ் தங்கியிருந்தனா். ஏற்கெனவே, தனிமைப்படுத்தப்பட்டிருந்த இவா்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனா். பரிசோதனை முடிவில், கோவில்வெண்ணியில் தங்கியிருந்த மியான்மரைச் சோ்ந்த 48 வயதுடையவருக்கும், அங்கு உதவியாளராக பணியாற்றிய கோவில்வெண்ணி பகுதியைச் சோ்ந்த 63 வயதுடையவருக்கும் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT