திருவாரூா் அருகேயுள்ள திருமீயெச்சூா் மேகநாத சுவாமி கோயிலில் உலக மக்கள் நலனுக்காக சிறப்பு யாகம் புதன்கிழமை நடைபெற்றது.
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடும் வகையில், உலக மக்களின் நன்மைக்காக, மிருதஞ்ஜய யாகம், தன்சாந்திரி யாகம் ஆகியவை நடைபெற்றன. இதையொட்டி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்டவையும் நடைபெற்றன. ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் யாருக்கும் கலந்துகொள்ளவில்லை. சிவாச்சாரியாா்கள் மட்டுமே பங்கேற்று, இந்த யாகசாலை பூஜைகளை நடத்தினா்.