திருவாரூர்

ஆற்றில் குளித்த மூதாட்டி மாயம்

29th Sep 2019 06:10 AM

ADVERTISEMENT


திருவாரூர் அருகே சனிக்கிழமை ஆற்றில் குளித்த மூதாட்டியைக் காணவில்லை. 
திருவாரூர் அருகே பழையவலம், அக்ரஹாரத் தெருவைச் சேர்ந்தவர் நாகலெட்சுமி (68). இவர், சனிக்கிழமை காலை அப்பகுதியில் செல்லும் வெட்டாற்றில் குளிக்கச் சென்றார். அப்போது, தவறி தண்ணீரில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.  அத்துடன் வைப்பூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் நிகழ்விடத்துக்கு வந்து, மூதாட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT