திருவாரூர்

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

29th Sep 2019 05:57 AM

ADVERTISEMENT


சீர்காழி அருகே உள்ள மடப்புரம் கிராமத்தில், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தார். 
மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (50). விவசாயி. இவருக்குச் சொந்தமான வயலில் சம்பா நேரடி விதைப்பு செய்வதற்கு உழவு செய்திருந்தார். இந்நிலையில், வயலில் உழவுப் பணியை மேற்கொண்டபோது மின் மோட்டார்களுக்கு செல்லும் மின்கம்பி வயலில் அறுந்து விழுந்து கிடந்ததைக் கவனிக்காமல், அதன் மேல் தனது காலை வைத்து விட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து கலியமூர்த்தி உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT