திருவாரூர் நகராட்சியின் சுகாதாரச் சீர்கேட்டை சரிசெய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் நகர் பகுதிகளில் பாதாள சாக்கடையானது, முறையாக பராமரிக்கப்படாததால், நிரம்பி வழிவதாகவும், இதை சரி செய்ய வேண்டும், நகரப் பகுதிகளில் தேங்கும் குப்பைகளை தினசரி அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவாரூர் புதிய பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் சாலை பாதிப்புகளை சீர் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரத் தலைவர் ஏ. ஹாஜா நஜ்புதீன் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் எம். முஜிபுர் ரஹ்மான், மாவட்டச் செயலர் ஏ. குத்புதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. ஹலில்ரஹ்மான், நிர்வாகிகள் ஏ. ஐபுருல்லா, எச். நவாஸ், எம்.எச். சாகுல்ஹமீது, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.