திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு பகுதியில் சிவன்கோயில் குளம் உள்ளது. இந்த குளம் குடிமராமத்து பணி மூலமாக தூர்வாரப்பட்டது. இதில் ஆழமாக இருந்த குளத்தில பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன்(45) என்பவர் திங்கள்கிழமை குளிக்க சென்ற போது தவறி விழுந்து குளத்துக்குள் மூழ்கினார். இதையடுத்து, போலீஸார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் அங்கு சென்று ஜாகிர் உசேனை சடமாக மீட்டனர். இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.