திருவாரூர்

வண்டாம்பாளை மாரியம்மன் கோயிலைத் திறக்க நடவடிக்கை: அமைச்சர் ஓ.எஸ். மணியன் உறுதி 

13th Sep 2019 06:16 AM

ADVERTISEMENT

நன்னிலம் அருகே உள்ள வண்டாம்பாளை மகா மாரியம்மன் கோயிலை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். 
வண்டாம்பாளை மகா மாரியம்மன் கோயில் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென பூட்டப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் கோயில் வெளியே பூஜை செய்து வழிபட நேர்ந்தது. இந்நிலையில், வண்டாம்பாளை கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஓ.எஸ். மணியன் வந்தார். அப்போது, மகா மாரியம்மன் கோயில் வாசல் பூட்டப்பட்டு, பக்தர்கள் வெளியில் நின்று வழிபட்டதைக் கண்ட அவர், பக்தர்களிடம் விவரத்தைக் கேட்டறிந்தார். 
அப்போது, கோயிலைத் திறக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்த போதிலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பேசி, கோயிலை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் உறுதியளித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT