திருவாரூர்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம்

13th Sep 2019 06:15 AM

ADVERTISEMENT

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கூட்டத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கூத்தாநல்லூர் வட்டக் கிளையின் முதலாம் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்டப் பொருளாளர் தெ.ஜெ.அமர்நாத் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்டப் பொருளாளர் எம்.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கூத்தாநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவரை நியமிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி வட்டத் தலைவர் அமர்நாத், செயலாளர் எஸ்.செங்குட்டுவன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளமாறன், வட்டத் துணை பொறுப்பாளர்கள் குணசேகரன், முருகேசன், மோகன்தாஸ், முருகையன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் முனியாண்டி, பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT