திருவாரூர்

உபரி நீர் திட்டத்தைக் கைவிடக் கோரிக்கை

13th Sep 2019 06:16 AM

ADVERTISEMENT

டெல்டா மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உபரி நீர் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் சு. செந்தில்குமார் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்பதால் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும். ராசி மணலில் தமிழகம் சார்பில் புதிய அணை கட்டுவதற்கு அதற்கான முன்மொழிவு குறித்து மத்திய அரசுக்கு அனுப்பி கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க
வேண்டும். 
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும். மேட்டூர் முதல் டெல்டா மாவட்டங்களின் கடைமடை பாசன வரையில் நிர்வாக அதிகாரங்களை மீண்டும் தஞ்சை காவிரி கண்காணிப்பு பொறியாளர் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT