திருவாரூர்

வீட்டின் கதவை உடைத்து தொலைக்காட்சிப் பெட்டி திருட்டு

7th Sep 2019 01:38 AM

ADVERTISEMENT

மன்னார்குடியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து தொலைக்காட்சிப் பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
மன்னார்குடி பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் அழகப்பன் (55). இவர் நடேசன் தெருவில் மருந்துக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 30-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிந்தவர், வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு தொலைக்காட்சிப் பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT