திருவாரூர்

வணிக நிறுவனங்கள் சுயசான்று பெறுவது அவசியம்

7th Sep 2019 01:40 AM

ADVERTISEMENT

வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுய சான்று வைத்திருப்பது அவசியம் என திருவாரூர் தொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்) ப. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் தொழிலாளர் துறையில் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஒப்பந்த தொழிலாளர் நிறுவனங்கள், தோட்ட நிறுவனம், பீடி நிறுவனம், மருத்துவமனைகள், பத்திரிகை நிறுவனங்கள், திரையரங்க நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும், 9 தொழிலாளர்களோ அல்லது அதற்கு கீழ் உள்ள தொழிலாளர்களோ பணியாற்றும் நிறுவனங்களிலும் அதன் உரிமையாளர் அல்லது வேலையளிப்பவர் சுயசான்று அளிப்பதன் பேரில் தொழிலாளர் துறை சார்பில் அந்நிறுவனங்களில் நேரடி ஆய்வுகள் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சுயசான்று அளிக்கும்பட்சத்தில் 10 முதல் 49 வரையிலான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் நேரடி ஆய்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மேலும் இந்த நிறுவனங்களின் மீது ஏதேனும் புகார் பெறப்பட்டால் உரிய அலுவலரின் அனுமதி, உத்தரவின்படி எந்த நிறுவனத்தையும் விதிவிலக்கை கருத்தில் கொள்ளாமல் ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, நிறுவனங்களின் உரிமையாளர்கள் அல்லது வேலையளிப்பவர்கள், தொழிலாளர் நலத் துறையின் இணையதள முகவரியான ‌w‌w‌w.‌l​a​b‌o‌u‌r.‌t‌n.‌g‌o‌v.‌i‌n -இல் சுயசான்றுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது தொழிலாளர் துறைக்கு உரிய விவரங்களை அளித்து சுய சான்றுக்கு உரிய அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இந்த வசதி மூலம் நிறுவனங்கள் ஆய்வின்போது ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதுடன் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான செயல்பாடுகளை உறுதிப்படுத்தமுடியும் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT