திருவாரூர்

முத்துப்பேட்டையில் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம்

7th Sep 2019 07:29 AM

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் 27-ஆவது ஆண்டு வெற்றி விநாயகர் ஊர்வலம் மற்றும் இந்து ஒற்றுமை பெருவிழா வெள்ளிக்கிழமை அமைதியாக நடைபெற்றது. 
செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியையொட்டி, முத்துப்பேட்டை பகுதியில் ஜாம்பவானோடை, தில்லைவிளாகம், சின்னங்கொல்லை வைரவன் சோலை உள்ளிட்ட 19 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் வழிபாடுகள் நடைபெற்றன. 
இதையடுத்து, ஜாம்பவானோடை வடகாடு சிவன்கோயில் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழக மண்டலச் செயலர் பாலை. பட்டாபிராமன் தலைமையில்,  அனைத்து கிராம கமிட்டி ஒருங்கிணைப்பு தலைவர் ஆர். சிவப்பிரகாசம், முன்னாள் ஊராட்சித் தலைவர் சரவணன், கள்ளர் மகாசபை தலைவர்  பாண்டியன்மணியன் ஆகியோர் நடைபெற்ற வெள்ளிக்கிழமை 27-ஆவது வெற்றி விநாயகர் ஊர்வலம் மற்றும் இந்து ஒற்றுமை பெருவிழா விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை சி. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 
இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ், தாழ்த்தப்பட்டோர் ஆணைய தேசிய துணைத் தலைவர் வேல்முருகன், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் கே.கே. செல்வகுமார், மாநில பாஜக பொதுச் செயலர் கருப்பு என்கிற முருகானந்தம், திருவாரூர் மாவட்ட தலைவர் பேட்டை சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதையடுத்து, விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலம் கந்தப்பரிச்சான் பாலம், கல்லடி கொல்லைப்பிரிவு சாலை, தர்கா தியாகி சிவகுருநாதன் நினைவுத்தூபி, கோரையாறு பாலம், ஆசாத்நகர், பழைய பேருந்து நிலையம், பங்களா வாசல், கொய்யா முகம் ரயில்வே கேட் வழியாக செம்படவன் காட்டில் கிழக்கு கடற்கரை புறவழிச்சாலையில் சென்று பாமணி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. 
பலத்த போலீஸ் பாதுகாப்பு: திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் வி. வரதராஜ், டிஐஜிக்கள் ஜெ.   லோகநாதன், (தஞ்சை), பாலகிருஷ்ணன் (திருச்சி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் துரை (திருவாரூர்), ராஜசேகரன்  நாகை) , பாண்டியராஜன் (கரூர்) , சீனிவாசன் (அரியலூர்), செல்வராஜ் ( புதுக்கோட்டை) , மகேக்ஷ்வரன் (தஞ்சை) மற்றும் 6 டிஎஸ்பிக்கள், 1000ஆய்வாளர்கள், 250 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, தில்லைவிளாகம், கோபாலசமுத்திரம், கீழக்காடு, கோவிலூர், கோபாலசமுத்திரம்,  பேட்டை ஆகிய இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு முத்துப்பேட்டை நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. மேலும் பழைய பேருந்து நிலையம், வசந்த் நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தன. தவிர, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
திருச்சி மத்திய மண்டல ஐஜி நன்றி: முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடைபெற ஒத்துழைத்த விழா ஏற்பாட்டாளர்கள், காவல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், செய்தி மற்றும் ஊடகத் துறையினர், பொதுமக்களுக்கு திருச்சி மத்திய மண்டல ஐஜி வி. வரதராஜ் நன்றி 
தெரிவித்து கொண்டார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT