திருவாரூர்

பள்ளிகளில் ஆசிரியர் தின விழா

7th Sep 2019 01:33 AM

ADVERTISEMENT

திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஆசிரியர் தின விழா நடைபெற்றது. திருவாரூர்த் தமிழ்ச் சங்கம், ரோட்டரி சங்கம், வேலுடையார் கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து விழாவை நடத்தின. 
விழாவுக்கு, திருவாரூர் தமிழ்ச் சங்கத் தலைவர் இரெ. சண்முக வடிவேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் வி. ராஜராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இதில் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.  
நிகழ்ச்சியில், வர்த்தகர் சங்கத் தலைவர் சி.ஏ. பாலமுருகன், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் ஜெ. கனகராஜன், வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எஸ்.எஸ். தியாகபாரி, தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செ. அறிவு, இரா. அறிவழகன், தெ. சக்தி செல்வகணபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
இதேபோல், கஸ்தூர்பா காந்தி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளித் தாளாளர் சந்திரா முருகப்பனுக்கு, ஆசிரியர்கள் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மன்னார்குடி பகுதியில்...
மன்னார்குடி, செப். 6: மன்னார்குடி சண்முகா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தாளாளர் ஆர்.எஸ். செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி நிர்வாகி எஸ். சண்முகராஜன், டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பள்ளி முதல்வர்கள் ஏ. அருள்ராஜ், சாந்தி ஆகியோர் ஆசிரியர் தினம் குறித்து பேசினர்.
பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன. தொடர்ந்து, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பெருமைகளை விளக்கி தமிழ், ஆங்கிலத்தில் பள்ளி மாணவர்களின் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT