திருவாரூர்

பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 01:39 AM

ADVERTISEMENT

பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆசிரியர் மன்ற நீடாமங்கலம் ஒன்றியச் செயலர் சி. ரவிகாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும், அரசாணை எண் 145 ஐ ரத்து செய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சோமசுந்தரம், வட்டத் தலைவர் இளமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கொரடாச்சேரியில்...
திருவாரூர், செப். 6: கொரடாச்சேரி வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஜாக்டோ - ஜியோ ஒன்றியத் தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும், 
பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பாமல், ஆசிரியர்களை நூலகர்களாகவும், அங்கான்வாடியிலும் பணியமர்த்தும் முடிவை கைவிட வேண்டும், ஊதியக்குழு முரண்பாடுகளை களைவதற்கு அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கையை வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பெ. ரவி, நிர்வாகிகள் குணசேகர், தீபன், பெத்தபெருமாள், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மன்னார்குடியில்... 
மன்னார்குடி, செப். 6: மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஜாக்டோ - ஜியோ நிர்வாகி சின்னையன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பணிமாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 
இதில், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் அ. முரளி, ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் முருகையன், கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான அரசுத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT