திருவாரூர்

கண்தான விழிப்புணர்வுப் பேரணி

7th Sep 2019 01:34 AM

ADVERTISEMENT

மன்னார்குடி கீரின் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், வெள்ளிக்கிழமை கண்தானம் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
சர்வதேச ரோட்டரி சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செப்டம்பர் 6 முதல் 10-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்னை கிரீன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். ராஜமோகன் தலைமை வகித்தார்.
பள்ளித் தலைமையாசிரியர் டி.எல். ராதாகிருஷ்ணன்,நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ். அன்பரசு, தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் டி. செல்வராஜ், முன்னாள் தலைவர் ஆர். ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன் சங்க முன்னாள் தலைவர் சி. அசோக்குமார் பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியில் கண் தானம், ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தி தேசிய மாணவர் படை, நுகர்வோர் மன்றம், தேசிய பசுமைப் படை ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலகமாக வந்து, மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். தேசிய மாணவர் படை அலுவலர் எஸ். திவாகர் வரவேற்றார். ரோட்டரி முன்னாள் சாசனத் தலைவர் கே. செந்தில்குமார் நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT