திருவாரூர்

இந்திய உணவுக்கழக பங்குகள் விற்பனை நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்

7th Sep 2019 01:32 AM

ADVERTISEMENT

இந்திய உணவு மற்றும் சுற்றுலாக்கழக பங்குகள் விற்பனை தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அந்த யூனியனின் துணைப் பொதுச் செயலர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மினி ரத்தனா தகுதிப் பெற்ற இந்திய உணவு மற்றும் சுற்றுலாக்கழக பங்குகள் விற்பனை செய்யவுள்ளன. ஒரு பங்கின் மதிப்பு ரூ.10 என்ற அளவில் 2 கோடி பங்குகள் விற்க பங்குச்சந்தை செபி அமைப்பிடம், ஆரம்ப பொதுச் சலுகை பங்குகள் விற்பனைக்கான வரைவுக் கடிதம் இந்நிறுவனம் தாக்கல் செய்து இருக்கிறது. 2018-2019-ஆம் நிதியாண்டு 4,949 லட்சம் பயணிகள் இ-டிக்கெட் மூலம் பயணம் செய்தார்கள். இதன் மூலம் ரூ.32,069 கோடி வருவாய் ஈட்டியது. இந்நிறுவனத்துக்கு ரயில் நீர் விற்பனையில் ரூ. 166 கோடி, நேரடி உணவு விற்பனையில் ரூ. 277 கோடி, உணவு விற்பனை குத்தகைக்கு விட்டதில் ரூ. 446 கோடி, சுற்றுலாப் பிரிவில் ரூ. 407 கோடி, முன்பதிவு பயணச்சீட்டு விற்பனையில் ரூ. 204 கோடி வருவாய் மற்றும் இதர வருவாய்கள் சேர்த்து மொத்தம் 1,544.16 கோடி கடந்த 2017-2018 ஆம் நிதியாண்டு வருவாயாக கிடைத்தது. இதில் வரி போக நிகர லாபமாக ரூ.222.02 கோடி. 
இந்நிறுவனத்துக்கு, 2016-2017 நிதியாண்டு ரூ.1,538.93 கோடி வருவாய் இருந்தது. இ- டிக்கெட்டுகளுக்கு சேவைக் கட்டணம் அடுத்த நிதியாண்டு கைவிடப்பட்டதால் 2017-2018 நிதியாண்டு இதன் வருவாய் ரூ. 1,468.18 கோடியாக சரிந்தது. தற்போது, அதை வசதிக் கட்டணம் என்ற பெயரில் மீண்டும் நிர்ணயித்து இருப்பதால் சுமார் ரூ. 600 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும். இந்த வருவாய் உயர்வு இந்நிறுவன பங்குகள் விற்பனைக்கு மேலும் கைகொடுக்கும். பங்குகள் கூடுதல் விலைக்கு விற்பனையாவதன் மூலம் பங்குகள் விலக்கலில் சுமார் ரூ. 650 கோடி மத்திய அரசால் நிதி திரட்ட முடியும். 
மேலும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.25,392 கோடி தட்கல் பயணச் சீட்டுகள் மூலம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்து இருப்பதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ரயில்வே கவுன்டர் பயணச் சீட்டுகளுக்கான " கிரிஸ்" நிறுவனத்தின் "நவீன கால பயணச் சீட்டு முறை" என்ற மென்பொருளை ஐ.ஆர்.சி.டி.சி கட்டுப்பாட்டில் எடுப்பதால் இ-பயணச் சீட்டுகள் வேகம் கூட்ட இயலும். தட்கல் பயணச் சீட்டுகள் விற்பனை ஐ.ஆர்.சி.டி.சி வசம் மாறும். இதனால் பங்குகள் மதிப்பு தொடர்ந்து உயர வழி வகுக்கும்.. 
முதற்கட்டமாக இந்நிறுவனம் 12.5 சதவீத பங்குகளை நடப்பு 2019-2020 நிதியாண்டு விற்பனைக்கு விடுகிறது. இதை கையாள புக் ரன்னிங் மேனேஜர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிறுவன 49 சதவீத பங்கு விற்பனை மூலம் ஏறத்தாழ ரூ. 2000 கோடி வரை நிதிதிரட்ட இயலும். ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் மேற்கொண்டு வரும் செயல்களான பயணச் சீட்டு, உணவு, சுற்றுலா, ரயில் நீர், தங்கும் வசதிகள் நேரடியாக ரயில் பயணிகளோடு தொடர்புடையது.
இந்நிறுவனத்தில், பங்குதாரர்கள் ஆதிக்கம் உருவாவது பயணிகள் நலன்களை சேர்த்து பாதிக்கும். எனவே, இந்த தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT