திருவாரூர்

விநாயகர் சிலை ஊர்வல பாதை: காவல் அதிகாரிகள் ஆய்வு

4th Sep 2019 09:11 AM

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பாதையில் காவல் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
விநாயகர் சதுர்த்தியையொட்டி, முத்துப்பேட்டையில் கடந்த 27ஆண்டுகளாக வெற்றி விநாயகர் ஊர்வலம் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு 19 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, செப்டம்பர் 6-ஆம் தேதி ஜாம்பவானோடை வடகாடு சிவன் கோயில் அருகே இருந்து புறப்பட்டு கந்தபரிச்சான்பாலம், ஜாம்பவானோடை தர்ஹா, ஆசாத் நகர் பழைய பேருந்து நிலையம், பங்களா வாசல், ரயில்வே கேட் அருகே கிழக்கு கடற்கரை புறவழிச்சாலை வழியாக செம்படவன்காட்டில் மாமணி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.
இதையொட்டி, இந்த வழித்தடத்தை தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், திருவாரூர் மாவட்ட எஸ்.பி. துரை, முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் இனிக்கோதிவ்யன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சிலைகளைக் கரைத்த பின்னர், யாரும் நகருக்குள் வராமல் கிழக்கு கடற்கரை புறவழிச்சாலை வழியாக திரும்பிச் செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT