திருவாரூர்

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

4th Sep 2019 09:12 AM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டியில் வழக்குரைஞர் சங்கத்தினர் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தொகையை மாதாந்திர முறையில் வழங்குதல்; விபத்து காப்பீடு இழப்பீட்டுத் தொகையை மாதாந்திர அடிப்படையில் வைப்பீடு செய்ய வேண்டுதல்; இவ்வழக்குகளில் வழக்குரைஞர்கள் இன்றி பாதிக்கப்பட்டவரே வழக்கைக் கையாளுதல் போன்ற உயர்நீதிமன்ற சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது, சமரச மையம், லோக் அதாலத்தில் வழக்குரைஞர்கள் கலந்து கொள்வதில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த பணி புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.
வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். செயலாளர் குமண வள்ளல், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட வழக்குரைஞர்கள்
பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT