திருவாரூர்

ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 09:14 AM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி வழியாக கம்பன் விரைவு ரயில், திருப்பதி- ராமேஸ்வரம் விரைவு ரயில்களை இயக்க வலியுறுத்தி, ரயில் உபயோகிப்பாளர் நலச் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர்- காரைக்குடி பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்வே கேட்களுக்கு கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும். சென்னை- காரைக்குடி கம்பன் விரைவு ரயில், திருப்பதி- ராமேஸ்வரம் விரைவு ரயிலை திருத்துப்பூண்டி வழியாக இயக்க வேண்டும். ரயில் நிலையத்தில் முன்பதிவு மையத்தை உடனடியாக தொடங்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நுகர்வோர் மைய நிறுவனர் பா.சு. மணி தலைமை வகித்தார். ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் வழக்கரைஞர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
 வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.செந்தில்குமார், நகர மேம்பாட்டுக்குழு தலைவர் டி. ராஜா, பொறியாளர் ஆர். செல்வகணபதி, மூத்த வழக்குரைஞர் கோ.தர்மராஜன், ரயில் உபயோகிப்பாளர் சங்கச் செயலாளர் எடையூர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT