திருவாரூர்

ரஜினிகாந்தின் தலைமையை ஏற்போம்: பாஜக மாநில துணைத் தலைவர்

4th Sep 2019 06:55 AM

ADVERTISEMENT

பாஜக தலைமை உத்தரவிட்டால் கூறினால், ரஜினிகாந்தின் தலைமையையும் ஏற்போம் என பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.
திருவாரூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
உழைப்பவர்களை பாரதிய ஜனதா கட்சி கைவிடாது என்ற வகையில் தமிழிசைக்கு ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6-ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது.    சிவகங்கையில் விநாயகர் சிலை போலீஸாரால் உடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடைபெற இருந்த விநாயகர் ஊர்வலங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது கடும் கண்டனத்துக்குரியது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
காவிரி பிரச்னை, மீத்தேன் பிரச்னை போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்று கூறுவதற்கு, திமுகவுக்கும், அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் தகுதி கிடையாது. ஏனெனில் இவற்றை கொண்டு வந்ததே திமுகதான்.  மண்ணெண்ணெய் பற்றாக்குறை குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்குத் தீர்வு காணப்படும். ரஜினிதான் அடுத்த பாஜக தலைவரா என்பது குறித்து தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை பாஜக ஆட்சிக்கு வருவதற்கு இவர்தான் சரியான தலைவர் என தலைமை கூறினால், ரஜினியின் கீழ் செயல்பட தயாராக 
இருப்போம் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT