திருவாரூர்

பேராசிரியர் பணி தகுதிதேர்வுக்கு பயிலரங்கம்

4th Sep 2019 09:11 AM

ADVERTISEMENT

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில், பேராசிரியர் பணிக்கான நெட் மற்றும் செட் தகுதித் தேர்வு எழுதுவதற்கான ஒரு நாள் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. 
பயிலரங்கை, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வீ.விவேகானந்தம் தொடங்கி வைத்தார். பயிலரங்கின் முதல் அமர்வில் நெட், செட் தகுதித்தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி அடையும் வழிமுறைகளையும், இரண்டாவது அமர்வில் தடைக்கற்களை எவ்வாறு படிக்கல்லாக்க வேண்டும் என்ற தலைப்பிலும், மூன்றாவது அமர்வில் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பிலும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. 
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் வரலாற்றுத்துறை பேராசிரியர்களும், பிற துறை பேராசிரியர்களும் பங்கேற்று
சிறப்பித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT