திருவாரூர்

நகராட்சி சாலையை பராமரிக்க வலியுறுத்தல்

4th Sep 2019 09:10 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர் நகராட்சியில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் சாலையை பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கூத்தாநல்லூர் நகராட்சி 7-ஆவது வார்டுக்குள்பட்ட அஹமதிய்யா தெரு சேறும், சகதியுமாக உள்ளது. காந்தி நகர் குளத்தை நகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்தது. அதில் இருந்து கழிவுகளை எடுத்துச் செல்லும் டிப்பர், இத்தெரு வழியாகத்தான் செல்கிறது. அந்தக் கழிவுகளும், குளத்து மண்ணும் கீழே சிதறி தெரு முழுவதும் மோசமான நிலையில் உள்ளது.
அவ்வப்போது மழை பெய்வதால், இப்பகுதி முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அஹமதிய்யாத் தெரு மட்டுமன்றி, நகரில் இதுபோல் பல தெருக்கள் உள்ளன. இவற்றை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேமுதிக நகர துணைச் செயலாளர் அய்.நூர்முஹம்மது கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT