திருவாரூர்

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தரக்கோரி ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 09:13 AM

ADVERTISEMENT

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தரக்கோரி, திருவாரூர் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 தூர்வாரும் பணியை உடனடியாக நிறுத்தி தண்ணீர் திறந்து விட வேண்டும். 100 நாள்கள் வேலையை உடனடியாக  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருவாரூர் அருகே குன்னியூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் வி.ஜெயபால் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், ஒன்றியச் செயலர் என். இடும்பையன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆர்.சாமியப்பன், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜி.பவுன்ராஜ், வி.ராஜாங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT