திருவாரூர்

கட்டுமானப் பணியின்போது மணல் சரிந்தது: ஆட்சியர் ஆய்வு

4th Sep 2019 09:10 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர் வெள்ளையாற்றில் பாலம் கட்டுமானப் பணியின்போது, மணல் சரிந்தது. நிகழ்விடத்தை மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
கூத்தாநல்லூரை அடுத்த வடபாதிமங்கலம் காவல் சரகத்துக்கு உள்பட்ட அரிச்சந்திரபுரம் ஊராட்சி, களிமங்கலம் கிராமத்தில் வெள்ளையாறு ஓடுகிறது. இந்த ஆற்றைக் கடந்துதான் கீழமணலி, பூந்தாழங்குடி, கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். இந்த ஆற்றின் குறுக்கே 75 அடி நீளத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 
பாலத்தில் இரும்புக் கம்பிகள் பதிக்கும் பணி நடைபெற்றுவரும் இவ்வேளையில், ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், ஆற்றின் ஓரத்தில் மண் சரிந்து விழுந்தது. இதில், ஆற்றின் ஓரத்தில் இருந்த தார்ச்சாலை, மின் கம்பங்கள், குடிநீர் தொட்டிகள் சேதமடைந்தன. 
இதையறிந்த மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் அவ்விடத்தைப் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி, வட்டாட்சியர் மலர்க்கொடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT