திருவாரூர்

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: விவசாய தொழிலாளர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம்

4th Sep 2019 09:13 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூரில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர் சங்க நகரக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறப்பட்டது.
கூத்தாநல்லூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அண்மையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சித்தாத்தங்கரை ஆர்.ராமாமிர்தம் தலைமை வகித்தார். இதில், நாகப்பட்டினத்தில் நடைபெறும் விவசாய தொழிலாளர்கள் வேலை உரிமை பாதுகாப்பு மாநாட்டில், திரளானோர் பங்கேற்பது; கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர்
எம்.சுதர்ஸன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் எஸ்.நீலாவதி,
பி.சௌந்தராஜன், வி.ராஜேந்திரன், பி.பக்கிரிசாமி, ஏ.பாஸ்கர்,
பி.தங்கையன், யு.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாய தொழிலாளர் சங்க நகரச் செயலாளர் எம்.சிவதாஸ் வரவேற்றார். குனுக்கடி டி.கண்ணையன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT