திருவாரூர்

ஆசிரியர் தின போட்டியில் பங்கேற்க அழைப்பு

4th Sep 2019 09:14 AM

ADVERTISEMENT

ஆசிரியர் தினத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி ஆர்வலர்களுக்கு  செப்டம்பர் 5-ஆம் தேதி பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இதில், 5 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "தேர்வும், நானும்' என்ற தலைப்பிலும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு "நான் விரும்பும் வகுப்பறை' என்ற தலைப்பிலும், ஆசிரியர்களுக்கு "என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது' என்ற தலைப்பிலும், கல்வி  ஆர்வலர்களுக்கு "அரசுப் பள்ளிகள் இணைப்பும், அடைப்பும்' என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 
 கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டியும், சிறுகதை போட்டியும் நடைபெறுகிறது. சிறப்பிடம்  பெறும் முதல் மூன்று பேருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.
 படைப்புகளை வரும் செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் யு.எஸ்.பொன்முடி, மாவட்டச் செயலர், ஆசிரியர் தின போட்டிகள்-2019, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தாரகை அச்சகம், எண்-4, எம்.ஜி.ஆர். நகர் மன்னார்குடி - 614 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தொடர்புக்கு- 94431 14459.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT