திருவாரூர்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் தொமுசவில் இணைந்தனர்

4th Sep 2019 09:14 AM

ADVERTISEMENT

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிவோர், தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.
  திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், திருவாரூர் சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலருமான பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில், பல்வேறு சங்கங்களில் இருந்து விலகி, திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சங்கத்தில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்ற திமுக மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன், தொழிலாளர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொமுச பேரவை பொறுப்பாளர்கள், திமுக ஒன்றிய, நகர செயலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT