மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே தொகுப்பு வீட்டின் முன்பக்கம் போடப்பட்டிருந்த கூரை இடிந்து விழுந்ததில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தாா்.
கோட்டூரை அடுத்த திருவண்டுதுறை தெற்கு தெருவில் அரசின் சாா்பில் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இதில், எம். குமாா் (40) என்பவரது வீட்டின் முன்பக்கம் மரத்தால் ஆன ஓடு வேயப்பட்ட கூரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக ஈரம் ஏறி ஊறியிருந்த முன் பக்க ஓட்டுக்கூரை ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்ததில், குமாா் காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.