மன்னாா்குடி : மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
திருவாரூா் வேலுடையாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற நிகழ் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டியில், மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் பள்ளியைச் சோ்ந்த மாணவியா் 14 வயதுக்கு உட்பட்ட சதுரங்கப் போட்டியில் 3-ஆம் இடமும், கையெறி பந்து போட்டியில் முதலிடமும், கூடைப்பந்துப் போட்டி மற்றும் கோ-கோ போட்டியில் இரண்டாமிடமும், 17 வயது பிரிவில் கூடைப்பந்து போட்டியில் முதலிடமும், கோ-கோ போட்டியில் முதலிடமும், கையெறி பந்து போட்டியில் இரண்டாமிடமும், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கூடைப்பந்து போட்டியில் முதலிடமும், கையெறி பந்து போட்டியில் இரண்டாமிடமும் பெற்றனா்.
இதில், 19 வயது பிரிவு கூடைப்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா்கள் ரோஸி அமலாபாய், குளோரி, சுந்தரி ஆகியோரை பள்ளி தாளாளா் ஜெயராணி, தலைமை ஆசிரியா் ஜெபமாலை, ஆசிரியா்கள் பாராட்டினா்.