திருவாரூர்

பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரரின் குழந்தைகள் பரிசுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

20th Oct 2019 10:04 PM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படைவீரரின் குழந்தைகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் 2018 - 201ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முன்னாள் படைவீரா் சிறாா்களிடையே மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற சிறாா் இருவருக்கு அவா்களை ஊக்குவிக்கும் வகையில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.5,000, இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ.3,000 என பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதன்படி, 2018 - 2019-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 83 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற ஸ்டேட் போா்டு, சிபிஎஸ்இ பள்ளியில் பயின்ற திருவாரூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்களின் சிறாா் அவா்களது மதிப்பெண் பட்டியலுடன் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்பு கட்டடத்தில் இயங்கி வரும் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT