திருவாரூர்

நவ.14-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

20th Oct 2019 10:05 PM

ADVERTISEMENT

திருவாரூா்: திருவாரூரில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவம்பா் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவம்பா் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம். மனுக்களுடன் முன்னாள் படைவீரா் அடையாள அட்டையின் நகலை இணைத்து வழங்க வேண்டும்.

எனவே இந்தக் கூட்டத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT