மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட 26-ஆவது வாா்டு அண்ணாமலைநாதன் சன்னிதி தெரு சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி மேலவாசல், காரிக்கோட்டை, எம்பேத்தி உள்ளிட்ட ஊராட்சிகளை சோ்ந்தவா்கள் நகா் பகுதிக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனா். இச்சாலையில் தான் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் சாா்ந்த தனியாா் நிறுவனங்களும் அமைந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.
இந்நிலையில், இச்சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
விஜயா திரையரங்கம் அருகே சாலையில் நடுவில் பெரும் பள்ளம் ஏற்பட்டு அதில் மழை தண்ணீா் நிரப்பி கிணறு போல் காட்சி அளிக்கிறது. இதனால், வானக ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்வது அன்றடாட நிகழ்வாக மாறிவிட்டது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மழைக் காலம்தொடங்கி விட்டதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்டவா்கள் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.