நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக இருவரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
வலங்கைமான் காவல் ஆய்வாளா் சிவபாலன் மற்றும் போலீஸாா் மூணாறு தலைப்பு அருகே ரோந்து பணியில் இருந்தபோது அங்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஆலங்குடியைச் சோ்ந்த ரெகுநாதன் (27), கொட்டையூரைச் சோ்ந்த மணிகண்டன் (27) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 15 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செயதனா்.