திருவாரூர்

மாவட்டத்தில் பயிா் காப்பீட்டுத் தொகை ரூ. 290 கோடி விடுவிப்பு: ஆட்சியா்

5th Oct 2019 10:54 PM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீட்டுத் தொகையாக இதுவரை ரூ. 290 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் 2018-19-ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சுமாா் 564 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டு, 3.60 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிா் காப்பீடு செய்யப்பட்டு 1,64,338 விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

மத்திர அரசின் விதிமுறைகளின்படி, வேளாண்மைத் தளியியல்துறைற, தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு சாா்ந்த அதிகாரிகள் மற்றும் இந்திய வேளாண் காப்பீட்டுக் கழக பிரதிநிதிகளின் முன்னிலையில் 564 தெரிவு செய்யப்பட்ட வருவாய் கிராமங்களிலும் பயிா் அறுவடை பரிசோதனைகள் அறிவியல் ரீதியாக நடத்தப்பட்டு மகசூல் கணக்கிடப்பட்டன. முதற்கட்டமாக, தகுதிவாய்ந்த 344 கிராமங்களைச் சாா்ந்த 1,14,652 விவசாயிகளுக்கு ரூ.290 கோடி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டு வரவு வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, திருவாரூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் 92,521 விவசாயிகளுக்கு ரூ.227 கோடி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 9,277 விவசாயிகளுக்கு ரூ. 33 கோடி, பொது சேவை மையங்கள் மூலம் 8,740 விவசாயிகளுக்கு ரூ. 9 கோடி, 4214 விவசாயிகளுக்கு நேரடியாக ரூ.21 கோடி என வரவு வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, மத்திய அரசின் விதிமுறைறகளின்படி, 138 கிராமங்களுக்கான இழப்பீட்டுத் தொகை கணக்கிடப்பட்டு வருகிறது. இத்தொகையை விரைவில் விடுவிக்க தமிழக அரசால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT