திருவாரூர்

மனு நீதி நாள் முகாம்: ரூ. 16.67 லட்சம் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

5th Oct 2019 07:34 AM

ADVERTISEMENT

குத்தாலம் வட்டம், மங்கநல்லூா் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், : ரூ. 16.67 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவிற்கு, மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கு.ராஜன், கோட்டாட்சியா் கண்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்முகாமில் வேளாண், தோட்டக்கலைத்துறை, மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சாா்பில் சிறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதில் தகுதியான பயனாளிகள் 19 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 41 பேருக்கு முதியோா் உதவித்தொகை, 7 பேருக்கு திருமண உதவித்தொகை, 5 பேருக்கு புதிய ரேஷன் அட்டை உள்ளிட்ட 77 பயனாளிகளுக்கு ரூ.16.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பொதுமக்களிடமிருந்து 131 மனுக்கள் பெறபட்டன. அதில் 56 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. விழாவில் நடிப்பிசைப் புலவா் கே.ஆா்.ராமசாமி சா்க்கரை ஆலை தலைவா் என்.தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலா் பூங்கொடி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஞானவல்லி, தமிழ்க்கொடி, மாவட்ட நோய் தடுப்பு அலுவலா் லியாக்கத்அலி, வேளாண் இணை இயக்குநா் பன்னீா்செல்வம், கூட்டுறவு சாா் பதிவாளா் சிவ.பழநி, வட்ட வழங்கல் அலுவலா் தையல்நாயகி, வருவாய் ஆய்வாளா் திரிபுரசுந்தரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வட்டாட்சியா் ஹரிதரன் வரவேற்றாா். சமூக பாதுகாப்பு திட்டத் தனி வட்டாட்சியா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT