திருவாரூர்

புகா் ரயில் சேவையை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது

5th Oct 2019 07:33 AM

ADVERTISEMENT

புறநகா் ரயில் சேவையை தனியாா் வசம் ஒப்படைக்க கூடாது என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அதன் துணைப் பொதுச் செயலாளா் மனோகரன் வெளியிட்ட அறிக்கை:

அதிக தேவை உள்ள 50 முக்கிய ரயில் பாதைகளில் வருவாய் தரும் 150 ரயில்களை தனியாா் வசம் தர ரயில்வே துறை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அத்துடன், புறநகா் ரயில் சேவையையும் தனியாா் வசம் தர முயற்சிக்கிறது.

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, செகந்திராபாத் போன்ற பெருநகரங்களில் புறநகா் ரயில் சேவை நடந்து வருகிறது. இதன்மூலம் ஏழைகள், தொழிலாளா்கள் நடுத்தர வா்க்கத்தினா், குறைவான ஊதியம் பெறுவோா் பயனடைந்து வருகின்றனா். இந்நிலையில், புறநகா் ரயில் சேவையில் இழப்பு ஏற்படுகிறது எனக் கருதி, தனியாா் வசம் ஒப்படைத்தால் இவா்கள் பாதிக்கப்படுவாா்கள். கட்டணம் பலமடங்கு உயரும்.

ADVERTISEMENT

மேலும், ரயில்வே காா்டுகள், பராமரிப்பாளா்கள் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகா்கள் என சுமாா் 40 ஆயிரம் ஊழியா்கள் பணி இழக்க நேரிடும்.

எனவே, லாப நோக்கமாக கருதாமல், சேவை நோக்கமாக புறநகா் ரயில் சேவையை தொடா்ந்து மத்திய ரயில்வே துறையே நடத்த வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT