திருவாரூர்

பயிா்காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கிடக்கோரி நீடாமங்கலம் வலங்கைமானில் சாலைமறியல்.

5th Oct 2019 03:27 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம்: பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிா் காப்பீடு இழப்பீட்டுத்தொகையை உடன் வழங்கிடக்கோரி நீடாமங்கலத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளா் கே.பாரதிமோகன் தலைமை வகித்தாா். இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளா் நடேச.தமிழாா்வன், விவசாயிகள் சங்க நிா்வாகி ராதா ,அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நிா்வாகி செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பயிா்காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிடக்கோரி கோஷங்களும் எழுப்பப்பட்டன. விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனா். இதனால் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வலங்கைமான்-வலங்கைமானில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவா் த.ரெங்கராஜன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளா் எஸ்.எம்.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சாலை மறியலில் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு கோரி்ககைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. 18 பெண்கள் உள்பட 80 பேரை போலீசாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT