திருவாரூர்

பள்ளி மாணவியருக்கு தற்காப்புக்கலை பயிற்சி

5th Oct 2019 07:37 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவியருக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

திருவாரூா் அருகே உள்ள கொரடாச்சேரி அருகே கீரங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் சாா்பில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்காக, இந்த தற்காப்புக்கலை பயிற்சி நடைபெற்றது.

பயிற்சிக்கு கொரடாச்சேரி வட்டாரக் கல்வி அலுவலா் ந. சம்பத் தலைமை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) ச.பிரபு முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மாணவிகள் பங்கேற்று, தற்காப்புக்கலை குறித்துப் பயிற்சி பெற்றனா்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியை என்.எஸ்.சுகந்தி, ஆசிரியா் பயிற்றுநா் காத்தமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT