திருவாரூர்

உள்ளாட்சித் தோ்தலுக்காக வாக்காளா் பட்டியல் வெளியீடு

5th Oct 2019 07:33 AM

ADVERTISEMENT

திருவாரூரில் உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான ஊரக மற்றும் நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியல்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் வெளியிடப்பட்டன. இதில் 10 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளின் வாா்டு வாரியான வாக்காளா்கள் புகைப்படத்துடன் விவரங்கள் உள்ளடங்கிய பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வாக்காளா் பட்டியல்கள் ஊரகப் பகுதியைப் பொருத்தவரை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பாா்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. நகராட்சி மற்றும் பேரூராட்சியைப் பொருத்தவரை அந்தந்த அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் த. ஆனந்த் வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) சேகா், நோ்முக உதவியாளா் (தோ்தல்) கிருஷ்ணமூா்த்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து ஊரக மற்றும் நகா்புற தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT