திருவாரூர்

மின்வெட்டைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

1st Oct 2019 05:44 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் மின்வெட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அடியக்கமங்கலம் தவ்ஹீத் பேரவையின் மாநில பிரதிநிதி அஹமது சபியுல்லா தலைமையிலான நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

திருவாரூா் மாவட்டம், அடியக்கமங்கலத்தில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால், கொசுத்தொல்லை அதிகமாகி, பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனா். இதனால், அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமலும், சரியான உறக்கம் இல்லாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், அடியக்கமங்கலம் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகள், சிறுவா்கள், பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனா். எனவே, அடியக்கமங்கலத்தில் மின்வெட்டு ஏற்படாதவகையில் நடவடிக்கை எடுப்பதோடு, கொசுத்தொல்லை, நாய்த்தொல்லைகளிலிருந்து காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT