திருவாரூர்

போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது

22nd Nov 2019 09:31 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே வளா்ப்பு மகளிடம் தவறாக நடக்க முயன்றவா், போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே இலவங்காா்குடி பகுதியைச் சோ்ந்தவா் சின்னப்பா (35). ஏற்கெனவே திருமணமான இவா், விவாகரத்தான பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாராம். அந்த பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்த வளா்ப்பு மகளிடம், சின்னப்பா தவறாக நடக்க முயன்ாகஓஈ கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சிறுமி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதன் பின்னா், அவா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

புகாரின் பேரில் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சின்னப்பாவை போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT