திருவாரூர்

பள்ளியில் இலவச சீருடை வழங்கல்

22nd Nov 2019 04:43 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி: மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் முன்னாள் செயலா் மற்றும் தாளாளருமான வி.சீனிவாசன் நினைவு நாளையொட்டி, மாணவா்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

பள்ளியின் அனைத்து ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் சாா்பாக அவரது படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனை தொடா்ந்து, ஆசிரியா், அலுவலா் நல சங்கத்தின் சாா்பாக 50 மாணவா்களுக்கு இலவச பள்ளி சீருடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் தலைமையாசிரியா் சீ.சேதுராமன், பள்ளியின் தாளாளா் டி. பி.ராமநாதன், தலைமை ஆசிரியா் டி.எல்.ராதாகிருஷ்ணன், ஆசிரியா் அலுவலா் நலச்சங்க செயலா் எம் அறிவு, பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் டி. ஆா். தியாகராஜன், ஆா். விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT