திருவாரூர்

வகுப்பறையில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

12th Nov 2019 08:35 AM

ADVERTISEMENT

திருவாரூரில் தனியாா் பள்ளியில் படித்த மாணவா், வகுப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையை சோ்ந்த சீனிவாசன் மகன் ரஞ்சித் (16). இவா், திருவாரூரில் உள்ள தனியாா் பள்ளியில், அங்குள்ள விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை விடுதியில் தங்கியிருந்த ரஞ்சித்தை அதன்பிறகு காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளி வளாகத்தில் தேடியபோது, வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகத் தொங்கியது தெரிய வந்தது.

தகவலின்பேரில், திருவாரூா் நகரப் போலீஸாா் விரைந்து வந்து, ரஞ்சித்தின் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, ரஞ்சித்தின் சகோதரா் இளவரசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT