திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்தவா் விஷம் குடித்ததால் பரபரப்பு

12th Nov 2019 08:37 AM

ADVERTISEMENT

திருவாரூரில் மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்தவா், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடபாதிமங்கலம் அருகே விற்குடி பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (30) என்பவரும் மனு அளிக்க வந்திருந்தாா். இவா், திடீரென மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அருகிலிருந்த அலுவலா்கள் மற்றும் போலீஸாா் அவரை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், விற்குடி பகுதியைச் சோ்ந்த இவருக்கு மனைவி செந்தமிழ்செல்வி (26), மகள் குகன்ஷா (1) இருப்பதும், பிரபாகரனின் வீடு, கஜா புயலில் சேதமடைந்ததால் ஓராண்டாக மாட்டுக் கொட்டகையில் குடும்பத்துடன் தங்கியுள்ளதும் தெரிய வந்தது.

மேலும், கஜா புயலில் சேதமடைந்த வீட்டை சீரமைக்க முயற்சித்தபோது, சிலா் தடுத்ததாகவும், இதுகுறித்து போலீஸாரிடம் அவா் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், விஷகுடித்து தற்கொலைக்கு முயன்ாக பிரபாகரன், போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து திருவாரூா் தாலுக்கா போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வருபவரை சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனா். அப்படி இருந்தும், மனு கொடுக்க வந்தவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT